ZRB's Cyberspace - பாட்டுக்குப் பாட்டு

தமிழில் நிறைய TV செனல்ஸ்ல வந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால ஆரம்ப்பிச்சிடேன். :-)

Name:
Location: Chennai, Tamil Nadu, India

My blogs will talk for me...

Tuesday, November 29, 2005

என்னடி முனியம்மா...

என்னடி முனியம்மா...

படம் : வாங்க மாப்பிள்ளை வாங்க
பாடியவர் : T.K.S. நடராஜன்
இயற்றியவர் : பாபா விக்ரம்
இசை : ???

நீ முன்னால போனா நான் பின்னாலெ வாரென்

கட்ட புள்ள குட்ட புள்ள கருகமணி பொட்ட புள்ள

நாக்கு செவந்த புள்ள கண்ணம்மா - இனி

நாந்தாண்டி ஒம் புருஷன் பொன்னம்மா

என்னடி முனியம்மா ஒன் கண்ணுல மையீ

யாரு வச்ச மையீ இது நான் வச்ச மையீ

நீ முன்னால போனா நான் பின்னாலெ வாரென்

மாடு ரெண்டும் மதுரை வெள்ளை மணிகள் ரெண்டும் தஞ்ஞாவூரு

குட்டி ரெண்டும் கும்பகோணம் கண்ணம்மா - அது

கூடுதடி சாலைபாதை பொன்னம்மா (என்னடி)

குத்தால அருவியிலெ குளிச்சாலும் அடங்காது

அத்தானின் ஒடம்பு சூடு கண்ணம்மா - நீ

அருகில் வந்தா ஜிலுஜிலுக்கும் பொன்னம்மா (என்னடி)

பச்சரிசி பல்லழகி பால் போல சொல்லழகி

சின்ன இடையழகி கண்ணம்மா - நீ

சிரிச்சாலெ முத்துதிரும் பொன்னம்மா (என்னடி)

கண்டாங்கி பொடவ கட்டி கை நிறைய கொசுவம் வச்சு

இடுப்பில் சொருகுரியெ கண்ணம்மா - அது

கொசுவமல்ல என் மனசு பொன்னம்மா (என்னடி)

ஏரிக்கரை ஓரத்தில ஏத்தம் எரக்கயில

இங்கிருந்து பாக்கும்போது கண்ணம்மா - நான்

எங்கேயோ போரேனடி பொன்னம்மா (என்னடி)

மழையில நனையும்போது மாந்தோப்பில் ஒதுங்கும்போது

மெல்ல அணைக்கும்போது கண்ணம்மா - உன்

மேனி நடுங்கலாமோ பொன்னம்மா (என்னடி)

ஒன்னழக மரச்சிருக்கும் ஒசந்த வெல ரவிக்க துணி

ஒரம் கிழிஞ்சதென்ன கண்ணம்மா - அதில்

ஒய்யாரம் தெரிவதென்ன பொன்னம்மா (கட்ட)


பாட்டுக்குப் பாட்டு - அறிமுகம்

தமிழில் நிறைய TV செனல்ஸ்ல வந்த பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். பல இந்தி TV செனல்ஸ்ல வந்த அந்தாக்க்ஷரி நிகழ்ச்சிதான் தமிழ்ல பாட்டுக்கு பாட்டா அவதாரம் எடுத்தது. எங்க ஆபிஸ்ல எங்கேயாவது டூர் போனா வேன்ல அந்தாக்க்ஷரி விளையாடறது வழக்கம். அப்பொல்லாம் பாட்டு கிடைக்காம திண்டாதுறதும் வழக்கம். அதனால கிடைக்கிற பாட்டுல எல்லாம் முதல் 3 வரிகளை இந்த வெப்சைட்டுல சேர்த்து வசிக்கலாம்னு தொணிச்சு. ஆரம்ப்பிச்சிடேன். :-)